Keerthi Suresh not joined in BJP
Keerthi Suresh not joined in BJP

கீர்த்தி சுரேஷும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். சுரேஷ் தவிர அவர் குடும்பத்தில் வேறு யாரும் பா.ஜ.க-வில் இல்லையாம்.

Keerthi Suresh not joined in BJP – ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

அதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக ஒரு செய்தி பரவி வைரலானது. இதுகுறித்து விசாரித்தால் தகவல் வேறொன்றாக உள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் பா.ஜ.க-வில் இருக்கிறார்.

அண்மையில் அவரது தாயார் மேனகா, பா.ஜ.க சார்பில் பிரதமரை சென்று சந்தித்தார்.

அதனால் கீர்த்தி சுரேஷும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். சுரேஷ் தவிர அவர் குடும்பத்தில் வேறு யாரும் பா.ஜ.க-வில் இல்லையாம்.