நடிகர் நாணியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். பல ரசிகர்களின் கனவு கனியாக இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனர் ஒடேலா ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் நானி கதாநாயகனாக நடித்திருக்கும் “தசரா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆப் ஸ்கிரீன் என நடிகர் நாணியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.