தெலுங்கு படத்தின் புரமோஷனுக்கு கிளாமர் உடையில் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

Keerthi Suresh in Glamour Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன், ரெமோ, போன்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

கிளாமர் டிரஸ்ஸில் கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை ஷாக்காக்கிய போட்டோஸ்

இறுதியாக கீர்த்தி சுரேஷ் தமிழில் செல்வராகவனுடன் இணைந்து நடித்து வெளியான படம் சாணி காகிதம். இந்தப் படத்தில் கிராமத்துப் பெண் போல் வெறித்தனமாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் புரமோஷனுக்கு கீர்த்தி கிளாமராக சாரியை அணிந்து சென்றுள்ளார். இதனைப்பற்றி கீர்த்தி இடம் கேட்டதற்கு நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்றும் சொல்லவில்லை நடிப்பேன் என்றும் சொல்லவில்லை. எந்த ரோலாக இருந்தாலும் அதை நல்லபடியா செய்யணும்னு தான் எதிர்பார்ப்பேன், அதற்காக லிமிட் தாண்ட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

கிளாமர் டிரஸ்ஸில் கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களை ஷாக்காக்கிய போட்டோஸ்

மேலும் இணையத்தில் வெளியான கீர்த்தியின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.