தளபதி 66 படம் பற்றிய தகவல் தீயாக பரவி வந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சிகர விளக்கத்தை அளித்துள்ளார்.

Keerthi Suresh Clarification on Thalapathy66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்றார், 21 வயது இந்தியப் பெண்..

பெஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் தளபதி விஜய் முடித்துவிட்ட நிலையில் அவர் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து துவங்கும் என சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் தீயாக பரவியது. இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயுடன் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை அது சுத்த பொய் என தெரிவித்துள்ளார். இதனால் இந்த கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Thenkachi Swaminathan Speech | தென்கச்சி கோ சுவாமிநாதனின் 25 கதைகள் 25 சிந்தனைகள் | இன்று ஒரு தகவல்

அதேசமயம் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.