Kaviyan Movie Update and Release Details - Massive Update | Sham | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News

Kaviyan Movie Update : உலக நாடுகளில் அதிக துப்பாக்கி வைத்து இருப்போர் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் நாடு அமெரிக்கா. அங்கு நடக்கும் துப்பாக்கி சூட்டில் அதிகம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இந்தியர்கள் என சமீப்திய ஒரு புள்ளி விபரம் செல்கிறது. இதை மையமாக பைத்து மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் காவியன்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுவதும் அமெரிக்காவின் Las Vegas-ல் Hollywood தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகனிடம் பணம் வாங்கிய அஜித்… அந்த மனுஷன் சொன்ன மாதிரியே நடந்துடுச்சே .!

இந்த திரைப்படத்தை 2M சினிமாஸிற்காக கே.எம் சபரீஸ் தயாரிக்கிறார். இதில் கதாநாயகனாக சாம் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். மனம் கொத்திப் பறவை படம் மூலம் தமிழில் அறிமுகமான ஆத்மையா கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் ஓர் கதாநாயகியாக ஸ்ரீதேவி குமார் நடித்திருக்கிறார்.

மேலும் ஸ்ரீநாத் மற்றும் ஹாலிவுட் நடிகர்களான ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகியோர் நடித்துள்ளனர் பல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தமிழ் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

இப்படத்தை சாரதி இயக்கியுள்ளார். என்.எஸ்.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ஷ்யாம் மோகன் எம்.எம் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பு அருண்தாமஷ் AKD கலைT.N கபிலன் சண்டை காட்சிகள் ஸ்டண்ட் சிவா மோகன் ராஜன் மற்றும் பிரஹா பாடல் எழுதியுள்ளனர்.

PRO புவன் மற்றும் C.N.குமார். இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் வெளியிட்டார். வலை தளத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் பல பார்வையாளர்களை கவர்ந்தது குறிப்படத்தக்கது.

இப்படத்தை தமிழில் SDC பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது என தயாரிப்பாளர் கே.வி சபரீஸ் தெரிவித்துள்ளார்.