பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து நடிகை காவியா விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kaviya Arivumani Relieve from Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவியா அறிவுமணி. இதற்கு முன்னதாக முல்லை வேடத்தில் சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரளா கனமழையில் 27 பலி : பிரதமர்- முதல்வர் துரித நடவடிக்கைப் பணி..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகப் போகும் காவியா?? வெளியான ஷாக் தகவல் - காரணம் இதுதானா??

சித்ராவின் மறைவைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி இந்த சீரியலில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது நடிப்பு பலரது விமர்சனங்களை பெற்று இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனியிடம் கிடைத்துள்ளது.

இப்படியான நிலையில் தற்போது காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் கசிந்துள்ளது. காரணம் பிக் பாஸ் கவின் லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிப்பில் ஊர்க்குருவி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Director Siva about Thala Ajith | #Annaatthe#Valimai

இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக காவியா அறிவுமணி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகலாம் என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றி இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.