Kaviya Arivumani in Movie

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் காவியா வெள்ளித்திரையில் என்டரி கொடுக்கவுள்ளார்.

Kaviya Arivumani in Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த அளவிற்கு மிகவும் பிரபலமான இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் காவியாவிற்கு இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கி உள்ளது.

தற்போது இவர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார். சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தில்தான் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் காவியா அறிவுமணி.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.