kavin
பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறும் காட்சியும், அதனைக்கண்டு லாஸ்லியா கதறி அழும் காட்சிகளும் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

Kavin quit from biggboss home video – ரூ.5 லட்சத்தை எடுத்துகொண்டு ஒருவர் வெளியேற விரும்பினால் வெளியேறலாம் என பிக்பாஸ் கூறியதைக் கேட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியற கவின் முடிவெடுத்தார். ஆனால், அவர் வெளியேறுவதை சாண்டியும், லாஸ்லியாவும் விரும்பவில்லை. அவர்கள் இருவரையும் அவர் சமாதானம் செய்யும் புரமோ வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

லாஸ்லியா எவ்வளவு முயன்றும் கவினை அவர் நிறுத்த முடியவில்லை. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் கதவின் அருகே நின்று கொண்டு லாஸ்லியாவிடம் காதல் ரசம் சொட்ட சொட்ட கவின் பேசும் காட்சிகளும், லாஸ்லியாவை கதறி அழும் காட்சிகளும் அடங்கிய புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இறுதியில் கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறார். லாஸ்லியா கதறிபடி கதவருகே கை வைத்து நின்று கொண்டிருப்பது பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் படி அமைந்துள்ளது.