Kavin Post After Her Birthday
Kavin Post After Her Birthday

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Kavin Post After Her Birthday : தமிழ் சின்னத்திரையின் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின்னர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கவின்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்தை அடைந்த கவின் அதன் பின்னர் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் கொஞ்சம் கவனிச்சு வாய்ப்பு கொடுங்க.. தளபதி விஜய்க்கு டேக் செய்து வனிதா வெளியிட்ட வீடியோ – இதெல்லாம் நடக்குமா?

மேலும் கவின் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரை பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.

இதனையடுத்து கவின் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி உருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவின் இறுதியில் அனைவருக்கும் ஐலவ்யு எனக்கூறி அனைவரும் நல்லா இருப்போம் என தெரிவித்துள்ளார்.