Kavin Losliya
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களையே கவின், லாஸ்லியா மிஞ்சி விட்டனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் கவின், லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே சீரியல் மூலமாக மக்களுக்கு அறிமுகமான கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலமாக வெள்ளித்திரையிலும் ஹீரோவானார்.

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையும் கவினுக்கு கொடுத்த புகழை விட பிக் பாஸ் பல மடங்கு புகழையும் ரசிகர்களின் பாசத்தையும் பெற்று கொடுத்துள்ளது. அது தான் அவருக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி. அதே போல கவினுடன் நல்ல நட்போடு இருந்த லாஸ்லியாவிற்கும் அதிக ரசிகர்கள் கிடைத்தனர்.

தற்போது காதலித்து வரும் இவர்களை பற்றி சிறு துரும்பளவு தகவல் கிடைத்தாலும் நெட்டிசன்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். கவின், பொது வெளியில் ஹாய் என கை காட்டினால் கூட இந்திய அளவில் ட்ரெண்டாக்கி விடுகிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களுக்கு அவர்களின் படங்களை பற்றிய அப்டேட் வந்தால் தான் ட்ரெண்டிங்கில் இடம் பிடிப்பார்கள். ஆனால் கவின், லாஸ்லியா கண் இமைத்தால் கூட ஒபாமா ரேஞ்சுக்கு ட்ரெண்டாகி விடுகின்றனர்.

தற்போதும் கூட கவிலியா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது. அதிலும் 50,000-ற்கும் அதிகமான டிவீட்கள் பதிவாகியுள்ளது என்றால் நீங்களே பார்த்துக்கோங்க.

இந்த வருடம் அதிகம் ட்ரெண்டானவர்களின் பட்டியல் எடுத்தால் கூட அதில் கவின், லாஸ்லியாவிற்கும் நிச்சயம் முன்னிலையில் தான் இருப்பார்கள் எனலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.