Kavin Look After Lockdown
Kavin Look After Lockdown

ஊரடங்கால் உடல் எடை கூடி குண்டாகி இருந்த கவின் தற்போது எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Kavin Look After Lockdown : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரத் தொடங்கி இருப்பவர் கவின். விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு இறுதி வரை சென்று சில பல பிரச்சனைகள் காரணமாக ரூபாய் 6 கோடியை பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இணையத்தில் வைரலாகும் வலிமை படத்தின் First லுக் போஸ்டர்? – கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்

அப்போதைய சூழ்நிலையில் இவருடைய இந்த முடிவால் ரசிகர்கள் மத்தியில் கவின் மீதான மதிப்பு அதிகம் ஆனது. அதன் பின்னர் தமிழில் லிப்ட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது நடித்து முடித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த கவின் உடல் எடை கூடி குண்டாக மாறியிருந்தார். தற்போது பழையபடி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிமாகி உள்ளார்.

Bigg Boss Kavin Photos

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.