Kavin
தனுஷ் குடும்பத்தில் ஒருவருடன் டேட் செய்ய ஆசை என கவின் கூறியது அவரது ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

தமிழ் சின்னத்திரை மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியினால் இன்னும் பிரபலமாகி விட்டார்.

பிக் பாஸில் லாஸ்லியாவை காதலித்து வந்த கவின் அவரை திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா? இவர்களின் காதல் திருமணம் எப்போது நடக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட கவினிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு கவின் கொடுத்த பதில்கள் அவர்களின் ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

நீங்கள் யாருடன் டேட் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என கேட்க ரசிகர்கள் நிச்சயம் லாஸ்லியாவின் பெயரை தான் சொல்லுவார் என எதிர்பார்த்து கமான் கவின் என ஆரவாரம் செய்தனர். ஆனால் அவரோ பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூரின் பெயரை கூறினார்.

அதன் பின்னர் இன்னொருவர் யார் என கேட்க செல்வராகவனுடன் டேட் செய்ய விரும்புவதாக கூறுகிறார். அவரை பற்றி தெரிந்து கொள்ளவே அவருடன் டேட் செய்ய வேண்டும் என கவின் கூறுகிறார். அப்போ லாஸ்லியா? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.