மூணாவது படத்திலேயே கவினின் மார்க்கெட் எகிறியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.

இந்த சீரியலுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பிறகு வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார்.

இந்த படத்தை தொடந்து சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருடைய மார்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் அடுத்து கவின் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் தற்போது இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பது கவினுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் டாடா படத்தின் வெற்றி காரணமாக கவின் தன்னுடைய சம்பளத்தை ஒன்றரை கோடி வரை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.