கவின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் கவின்.

இந்த சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் லிப்ட் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் கவின் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் பரவியது.

ஆனால் தற்போது இந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பதிலாக கவின் பியார் பிரேம காதல் என்ற ஹிட் படத்தை கொடுத்த இலன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.