kavin friend
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினை கன்னத்தில் அறைந்த அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி தற்போது பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

kavin friend ready to get slap from losliya – பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்து பலரிடம் கெட்ட பெயர் எடுத்தவர் கவின்.

இதைத்தொடர்ந்து அவரை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அவரின் நண்பர் பிரதீப் ஆண்டனி கவினின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

நீ ஒருவேளை வெற்றி பெற்றால் அப்போது மேடையில் உன்னிடம் நான் அறை வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

அஜித் என் நெருங்கிய நண்பர், ஆனாலும் வாய்ப்பு கேட்டதில்லை – சீரியல் நடிகர் ஓபன் டாக்.!

ஆனால், கவின் வெற்றி பெறவில்லை. மாறாக ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தே அவர் வெளியேறினார்.

தான் இதுவரை செய்த தவறுகளுக்கு இதுதான் சரியான முடிவு என்று விளக்கமும் அளித்தார்.

தற்போது அவரின் நண்பர் பிரதீப் ஆண்டனி ‘நீங்கள் அனைவரும் லாஸ்லியாவை வெற்றிப்பெற செய்துவிட்டால் அவனுக்கு பதில் லாஸ்லியாவிடம் அந்த அறைய நான் வாங்கிக்கொள்கிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.