பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை இட்டுள்ளார்.

Kavin explains his decision to his fans – பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்தாலும் ரசிகர்களின் மனதை வென்றதால் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்ததால் 90 நாட்கள் கடந்தும் அவர் நிகழ்ச்சியில் நீடித்து வந்தார். ஆனால், 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு திடீரென அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை அவர் இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு இதை எப்படி துவங்குவது என தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின் இதை கூறலாம் என நினைத்தேன். முதலில் நான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றேன் என நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் எடுத்த முயற்சிகள அனைத்தும் தோல்வில் முடிந்தது. எனவே அதை திரும்ப பெறும் வாய்ப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தேன்.

Celebrities Tweet About Kavin's Decision : Live Statements.! Bigg Boss Tamil | Bigg BOss Tamil 3 | Kavin Raj | Losliya | Kollywood Cinema News

கொஞ்சம் பணமும், புகழும் எதிர்பார்த்தே சென்றேன். ஆனால், இப்போது பார்ப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இந்த புகழை அனுபவிக்க விரும்பினாலும், நான் சந்தித்துள்ள சில பிரச்சனைகள் என்னை அனுபவிக்க முடியாமல் தடுக்கின்றன். எனவே, என் மீது இதுவரை நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி கூறிய முடியாத நிலையில் இருக்கிறேன். நீங்கள் காட்டிய அன்பை திருப்பி தருவதை விட என் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறேன்.

நன்றி சொல்ல வார்த்தையில்லை… மிகச்சிறந்த பரிசு இது – தர்ஷன் உருக்கம்

எல்லாவற்றையும் விட இது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. இது எனக்கு தெரிந்திருந்தும் எனக்கு புரியவே நாட்கள் ஆகிவிட்டது. நான் செய்த சில காரியங்கள் சிலரை காயப்படுத்திவிட்டது. அதை திருத்திக் கொள்கிறேன். என் வெளியேறியது உங்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால், நான் எனக்கு நேர்மையாக இருந்ததால் எடுத்த முடிவு. என்னை புரிந்து கொண்டு மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். ஒருவேளை யார் மனதையும் புண் படுத்தியிருந்தால் வருத்தப்படுகிறேன். எப்பவும் போல கூட இருங்க எல்லாரும் நல்லா இருப்போம்.

என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.