Kavin Dubbed to Lift
Kavin Dubbed to Lift

நடிகர் கவின் விஜய் டிவி மகாபாரதம் பீமனை போல மாறியுள்ளார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kavin Dubbed to Lift : தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாகவும் தொகுப்பாளராகவும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் கவின்.

வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்த இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் இரண்டும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அவர் சமூக வலைதளங்களில் என்ன பதிவிட்டாலும் அது மிகவும் வைரல் ஆகி விடுகிறது.

உங்களுக்கு ஜோடியா நடிக்கணும்.. மாளவிகா மோகனன் ஆசைக்கு தனுஷ் கொடுத்த பதில் – எதிர்பார்ப்பை என்கிற வைத்த பதிவு

மேலும் இவர் தற்போது லிப்ட் என்ற படத்தில் பிகில் அமிர்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தற்போது படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பதால் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

லிப்ட் படத்திற்காக டப்பிங் கொடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவின்.

இந்த புகைப்படத்தில் கவின் பார்ப்பதற்கு விஜய் டிவி மகாபாரதம் பீமன் போலவே காட்சி அளிக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கவின் வெளியிட்ட புகைப்படம் பற்றி ரசிகர்களின் சில கமெண்ட்ஸ்