Kavin As Assistant Director in Thalapathy 65

தளபதி 65 படத்தில் பிக் பாஸ் கவின் உதவி இயக்குனராக பணியாற்ற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Kavin As Assistant Director in Thalapathy 65 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் அடுத்ததாக கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பிரபல தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச்சு 31ஆம் தேதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. பூஜை நடந்த சம்பிரதாயத்திற்காக இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜையில் பிக் பாஸ் கவின் அவர்களும் பங்கேற்றார். இதனால் அவர் இப்படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது.

ஆனால் கவின் தளபதி 65 படத்தில் நடிக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் கவின் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் நெல்சன் திலீப் குமாரின் நண்பர் என்பதால் டாக்டர் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதை தொடர்ந்து தளபதி 65 படத்திலும் பணியாற்ற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.