Kavin Army Alert to Fans

கவின் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலை குறித்து புகைப்படத்தை வெளியிட்டு எச்சரித்துள்ளனர் கவின் ரசிகர்கள்.

Kavin Army Alert to Fans : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் வலம் வருபவர் கவின். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார். 

வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா? என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்த இவர் தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கவினுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இதனை பயன்படுத்தி ஒருவர் என் பெயர் சந்தோஷ். கவின் தொண்டு நிறுவனத்தின் தலைவர் எனக் கூறி பணம் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

இது குறித்த ஸ்கிரீன் ஷாட் புகைப்படத்தை வெளியிட்டு கவின் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை எச்சரித்துள்ளனர். 

இது போன்ற மெசேஜ்கள் உங்களுக்கு வந்தால் அதை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.