கட்ட குஸ்தி திரைப்படத்தின் சல் சக்கா பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

இயக்குனர் செல்ல அய்யாவு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. காமெடி திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கட்ட குஸ்தி திரைப்படத்தின்… 'சல் சக்கா' பாடல் வீடியோ வெளியீடு.!

விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த “சல் சக்கா” என்னும் பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப்பாடலை பொன்னி தயாளன் பாடி இருக்கிறார். தற்போது இப்பாடலின் முழு வீடியோ இணையதளத்தில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.