விஜயின் எளிமையை கண்டு தான் வியந்து போனதாக பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கும் விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர்தான் இளைய தளபதி விஜய். இவர் மாசான ஆக்ஷன் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான மனிதன் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் இந்த குணத்தை பற்றி பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

விஜயின் எளிமையை கண்டு வியந்து பேசிய பாலிவுட் நடிகை - பேட்டியில் பகிர்ந்திருக்கும் தகவல்.

அதில் கத்ரீனா நான் நடிகர் விஜய்யுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்திருக்கிறேன் அதற்கான ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்றது. அப்போது நான் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு தனது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது எனது அருகில் ஒருவர் ஷூ கால்களுடன் நிற்பது தெரிந்தது ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மொபைல் பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்த போது தான் தெரிந்தது அது நடிகர் விஜய் என்று.

விஜயின் எளிமையை கண்டு வியந்து பேசிய பாலிவுட் நடிகை - பேட்டியில் பகிர்ந்திருக்கும் தகவல்.

அவர் என்னிடம் பாய் கூறுவதற்காக எனது அருகில் நின்று கொண்டிருந்தார். நான் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்ததால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி எனக்காக காத்துக் கொண்டிருந்தார். இதனை என்னால் மறக்கவே முடியாது. ஒரு மாபெரும் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் இவ்வளவு எளிமையாக இருப்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது என்று அப்பேட்டில் பகிர்ந்து இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜயின் எளிமையை கண்டு வியந்து பேசிய பாலிவுட் நடிகை - பேட்டியில் பகிர்ந்திருக்கும் தகவல்.