Katrina Kaif
Katrina Kaif

Katrina Kaif :

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இளம் நடிகரை மெர்சலாக்கிய விஜயின் மெசேஜ் – வைரலாகும் புகைப்படம்.!

தனது தந்தையின் கரம் பற்றி திரை துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை தனது விடாமுயற்சியால், தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளை கடந்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார். எவருடனும் அவ்வளவு எளிதில் சகஜமாக பேசிவிட மாட்டார்.

இந்நிலையில் விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட படப்பிடிப்பு அனுபவத்தை பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இருவரும் கோலா விளம்பரத்தில் 2000-த்தின் தொடக்கத்தில் நடித்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசிய கத்ரினா, “ஷுட் முடிந்து நாங்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தோம்.

Katrina Kaif and vijay
Katrina Kaif and vijay

நான் ஃபோன் உபயோகித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் முன்னே யரோ வந்து நின்றனர்.

அவருடைய கால்களை நான் பார்த்தேன். ஆனால் அவர் யார் என்று பார்க்காமல் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சில நேரம் ஆகியும் அந்த நபர் அங்கேயே நின்று கொண்டிருந்தால் யார் என்று பார்த்தேன்.

அப்போது தான் அது விஜய் என தெரிந்தது. ஷுட் முடிந்ததால் அவர் என்னிடம் குட்பை சொல்வதற்காக வந்திருந்தார். நான் ஃபோனில் பிசியாக இருந்ததால் என்னை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தார்’ என்று கூறியுள்ளார் கத்ரினா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here