Kaththi Gift

Kaththi Gift : கத்தி படத்திற்கு விஜய் கொடுத்த பரிசு என்ன என்பதை முதல் முறையாக உளறி கொட்டியுள்ளார் அனிருத்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் கத்தி.

மாபெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்த இந்த படத்திற்கு இளம் இசை புயலான அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்திற்காக தளபதி விஜய் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் அது குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்த அனிருத் பேட்டி ஒன்றில் உளறி கொட்டியுள்ளார்.

அதாவது விஜய் பியானோ ஒன்றை அனிருத்திற்கு பரிசாக வழங்கியுள்ளார். அந்த பியானோவை தான் அனிருத் தற்போது வரை பயன்படுத்தி வருகிறாராம்.

இவ்வளவு நாளாக இது குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்த அனிருத் தற்போது கூறியிருப்பது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

மேலும் விஜய் வெளியே சொல்ல வேண்டாம் என கூறியிருக்கலாம். அதனால் கூட அனிருத் மெளனமாக இருந்திருப்பார். ஆனால் தற்போது வாய் தவறி உளறிட்டார் போல என கூறி வருகின்றனர்.

Anirudh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.