பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மெகா சங்கமம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
Kathir Video Call With Pandian Stores Actors : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் சீரியல் மற்றும் படங்களின் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது தளருங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஷூட்டிங் நடைபெறத் தொடங்கியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இது பெரும் சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகியவை இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் முல்லை கண்ணன் கஸ்தூரி ஐஸ்வர்யா ஆகியோர் மதுரையில் உள்ள மல்லி வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு, பிரதமர் வாழ்த்துச் செய்தி
ராதிகா வீட்டு கிரகப் பிரவேசத்தை தவிர்க்க கோபி தன்னுடைய குடும்பத்துடன் மதுரை வந்துள்ளார். இவர்களும் நள்ளி வீட்டுக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி விட்டனர். ஆனால் இந்த மெகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்களான மூர்த்தி, ஜீவா மற்றும் கதிர் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உங்களுக்கு எப்போ கல்யாணம்? – Shalu Shammu கொடுத்த Shocking பதில்! | Latest Cinema News
இருந்த போதிலும் கதிர் வீடியோ கால் மூலமாக தனம், முல்லை, கஸ்தூரி, கண்ணன் ஆகியோரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.