பிகில் பட பிரபலமான கதிர் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.
Kathir Tweet About Bigil : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகிபாபு, கதிர், விவேக், ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப், இந்துஜா என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நோக்கி படு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கதிர் தனக்கான படப்பிடிப்பை முழுமையாக முடித்து கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ட்வீட் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் தளபதி விஜய் அண்ணாவின் அன்பிற்கு நன்றி என கூறியுள்ளார். மேலும் அட்லீக்கும் செலிபிரிட்டி மேனேஜரான ஜெகதீஷுக்கும் நன்றி கூறியுள்ளார்.
This photo speaks what my heart wants to speak!! Completed shooting for #BIGIL ! Ur hug gave me an emotional happiness n unconditional love @actorvijay na! Thank u & Love u so much for all the Best Moments. Thank u na @Atlee_dir @Jagadishbliss for making all these true pic.twitter.com/MvKIMIZnP8
— kathir (@am_kathir) July 31, 2019