Kathamba Kulambu :
 Kathamba Kulambu :

 Kathamba Kulambu :

கதம்பம் குழப்பு பொதுவாகவே எல்லா காய்கறிகளையும் வைத்து செய்வது ஆகும். காய்களையும், பருப்பு வகைகளையும் தனித்தனியாக வேக வைத்து பிறகு தாளித்து புளி தண்ணீர் சேர்த்து செய்வது தான் இந்த கதம்ப குழம்பு.

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய், உருளைக்கிழங்கு – 1
கேரட், அவரை – 3
தக்காளி – 1
துவரம் பருப்பு – 1 கப்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
பெருங்காய தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – ஒரு கை உருண்டை அளவு
வெந்தயம் – கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு, உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
சாம்பார் தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை லேசாக வறுத்து அதனை பொடி செய்துக்கொள்ள வேண்டும். மேலும், துவரம் பருப்பை வேக வைத்து நன்று மசித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு தாளித்து பின் அதனுடன் வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.

பிறகு, காய்கறிகளை வேகவைத்து கடாயில் சேர்த்து கொண்டு, முன்னதாக தயாரித்த பருப்பு மசியலை காய்கறியுடன் சேர்த்து பிறகு அதனுடன் புளி கரைசலை சேர்த்து கை விடாமல் கலக்கி விட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

புளி கொதித்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு அடுப்பை குறைத்து அதில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் தனியா சேர்த்த பொடியை போட்டு மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கும் போது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டால் சுவையான கதம்ப குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here