தமிழ் சினிமாவால் ஸ்ரீ ரெட்டியை தொடர்ந்து சின்மயி திரையுலக பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதில் முதல் ஆளாக சிக்கியவர் வைரமுத்து.

சின்மயியை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். சின்மயின் இந்த அதிரடி செயலுக்கு பலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உண்மையை காலம் சொல்லுமா? ஏன் ? நீங்களே சொல்லலாமே ?

சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு.

உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது என விமர்சித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த கேள்வி சரியானது தான் என நெட்டிசன்களும் கருத்து கூறி வருகின்றனர்.