Kasthuri Vanitha Fight in Bigg Boss House - Do you Noticed this? | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema news | Tamil Cinema News
நீ ஒரு பஜாரி என மறைமுகமாக வனிதாவின் முகத்திற்கு நேராக கூறியுள்ளார் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை கஸ்தூரி.

Kasthuri Vanitha Fight : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 17-வது போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார் கஸ்தூரி.

வெளியில் இருக்கும் போது ஓவர் பில்டப் கொடுத்து விட்டு உள்ளே சென்றதும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல சைலண்டாகவே இருந்து வருகிறார். பெரிய அளவில் கண்டன்ட் கொடுக்கவில்லை.

இதனால் பிக் பாஸ் வனிதாவை அனுப்பி வைத்தார். வனிதா சென்ற முதல் நாளே தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்ய தொடங்கி விட்டார்.

முகேனுக்கும் அபிக்கும் இடையே கேம் விளையாடி அவர்களின் சேப்டரை குளோஸ் செய்து விட்டார்.

இதனையடுத்து கஸ்தூரி வனிதாவிடம் பேசிய போது நீங்க குரல் உயர்த்தி பேசுற இடத்துல தான் நீங்க தோற்று போயிடுறீங்க.

அது தான் உங்கள ஒரு பஜாரி மாதிரி காட்டி இருக்கு, நீங்க உங்க கோவத்தை கண்ட்ரோல் பண்ணி இருந்தா நீங்க இங்க இன்னைக்கு இளவரசியா இருந்திருப்பீங்க என கூறியுள்ளார்.

மேலும் இதனால் கொஞ்சம் கடுப்பான வனிதா நான் தோத்து போய்ட்டேனு நீங்க எப்படி ஜட்ஜ் பண்ணலாம் என கேட்டதற்கு நான் எவிக்ஷன்ல தோத்துடீங்கனு சொன்னேன் என அப்படியே பிளேட்டை மாற்றி விட்டார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.