தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

Kasthuri Raja About Dhanush Divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திடீர் திருப்பம்.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை - வெளியான புதிய தகவல்

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் 18 வருடம் கழித்து ஏன் இந்த முடிவு என்று கேள்வி எழுப்பி வந்தனர். இருவரும் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இருவருக்கும் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தான் உள்ளது. குடும்பங்களில் ஏற்படும் சாதாரண பிரச்சினைதான் இது இருவரிடமும் பேசியுள்ளேன். அவர்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இருவரும் தற்போது சென்னையில் இல்லை ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

திடீர் திருப்பம்.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை - வெளியான புதிய தகவல்

இன்னொரு பக்கம் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ரஜினி இருவரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் சேர்வார்களா அல்லது அறிவித்தபடி பிரிவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.