Kasthuri Joins With Kamal Haasan
Kasthuri Joins With Kamal Haasan

கமலுடன் இணைவது குறித்து பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

Kasthuri Joins With Kamal Haasan : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை இந்த கொரானா கோரத்தாண்டவத்தில் இருந்து பாதுகாக்க கமல்ஹாசன் நமக்கு நாமே தீர்வு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து நடிகை கஸ்தூரி இந்த அமைப்பினர் தானும் சென்னையை காப்பாற்றுவதற்காக இணைவதாக தெரிவித்துள்ளார்.