Kasthuri Blasted Thala Fans
Kasthuri Blasted Thala Fans

நான் கிழவினா அப்போ அஜித் யார் என டுவிட்டரில் தல ரசிகர்களை விளாசி எடுத்துள்ளார் கஸ்தூரி.

Kasthuri Blasted Thala Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் சிறுசிறு வேடங்களில் இன்னும் சில படங்களில் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வரும் இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை மூண்டு கொள்கிறது.

அந்த வகையில் தற்போது கஸ்தூரி நடித்த ஒரு பாடலை வெளியிட்டு அஜித் ரசிகர் ஒருவர் இது கஸ்தூரி கிழவி தானே என பதிவிட்டுள்ளார்.

ஈரமான நீச்சல் உடையில் நீர் சொட்டச் சொட்ட போட்டோ வெளியிட்ட கஸ்தூரி – உங்களுக்காக 42 வயசு என வாய் பிளக்கும் ரசிகர்கள்!

இதைப்பார்த்த கஸ்தூரி எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? Ajith sir கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னன்னா கஸ்தூரி கிழவி, அப்ப என்ன விட ஐந்து வயது அதிகமான அஜித் சார் ஐயோ ஐயோ என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் அஜித் ரசிகர்கள் கண்டபடி பேசிய ஸ்கிரீன் ஷாட்டுகளை வெளியிட்டு போயி வேற வேலை இருந்தா பாருங்கடா. உங்களை மாதிரி #dirtyAjithFans னால All Respectful Ajith Fans க்கும் சேர்த்து கெட்ட பேரு. அதை புரியுற அளவுக்காவது அறிவு இருக்கா இல்லையா?

மேலும் நான் அஜித் சாரை பற்றி கூறுவதாக யாரும் தவறாக பேச வேண்டாம். அவர் மீது எனக்கு அதீத மரியாதை உள்ளது. அவருடைய ரசிகர்களாக இருக்கிறார்கள் பெருமை அடைகிறார்கள். பெருமைப்படுங்கள் ஆனால் இதுபோன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.