பொன்னியின் செல்வன் திரைப்படம் நன்றாக இல்லை என மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பலர் படமாக்க முயற்சித்து பின்னர் முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக எடுத்து முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார் மணிரத்தினம்.

படமா அது?? பாக்கவே புடிக்கல பொன்னியின் செல்வன் படத்தை மறைமுகமாக விமர்சித்த நடிகை கஸ்தூரி - வைரலாகும் பதிவு

நடிகர் சியான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி பதிவு செய்து வரும் வேளையில் நடிகை கஸ்தூரி படம் நன்றாக இல்லை என மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில் ஆடம்பரமான விருந்து …ரகரக உணவு …. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை… ரசிக்க இயலவில்லை.

ஆடம்பர இசை …. எத்தனையோ வாத்தியங்கள்…. ஒன்றில் கூட தமிழில்லை. அதனால் ஒட்ட முடியவில்லை என பதிவு செய்ய இவர் பொன்னியின் செல்வன் படத்தை தான் இப்படி விமர்சனம் செய்துள்ளார் என கூறி வருகின்றனர். இவரது விமர்சனத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

படமா அது?? பாக்கவே புடிக்கல பொன்னியின் செல்வன் படத்தை மறைமுகமாக விமர்சித்த நடிகை கஸ்தூரி - வைரலாகும் பதிவு

இதுவரை பலர் முயன்று முடியாததை செய்து அப்படி என்னதான் இருக்கிறது என பார்த்து விடலாம் என அனைவரும் மனதிலும் ஒரு எண்ணத்தை உருவாக்கியதே பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என சிலர் கூறி வருகின்றனர்.