மகான் திரைப்படம் படு தோல்வி என பிரபல நடிகை ஒருவர் பதிவு செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Kasthuri About Mahaan Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான மகான் என்ற படத்தில் நடித்திருந்தனர்.

மகான் படம் படு தோல்வியா?? பிரபல நடிகையின் பதிவால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் - யார் அவர்?? என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

அமேசான் ப்ரைம் வீடியோவில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. காந்தியவாதி குடும்பத்தில் பிறந்த விக்ரம் பிறகு தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று நிலையில் நடிகை கஸ்தூரி மகான் திரைப்படம் தோல்வி படம் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக அப்பா மகன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஏதாவது இருக்கா சொல்லுங்க என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மகான் படம் படு தோல்வியா?? பிரபல நடிகையின் பதிவால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் - யார் அவர்?? என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

கஸ்தூரியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு படம் பிடிக்கலன்னா அது தோல்விப்படம் லிஸ்ட்ல சேர்ந்து விடுமோ? என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.