சென்னையின் பிரபல திரையரங்கு உரிமையாளர் மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Kasi Theatre Owner Passes Away : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு என தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் பெரிய நடிகர்களின் படங்களை திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதற்காகவே ரசிகர்கள் மத்தியில் சில திரையரங்குகள் மிகவும் பிரபலம்.
அப்படியான தியேட்டரில் ஒன்றுதான் அசோக் நகரில் உள்ள காசி திரையரங்கம். ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலருக்கும் ஃபேவரைட் திரையரங்கம் ஆக இது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திரையரங்கத்தின் உரிமையாளர் பழனியப்பன் அவர்கள் இன்று உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.