மிர்ச்சி சிவாவின் ‘காசேதான் கடவுளடா’ படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது அதனை உற்சாகத்துடன் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ‘சென்னை 600028’ படத்தில் மூலம் அறிமுகமானவர்கள் மிர்ச்சி சிவா. இதனைத் தொடர்ந்து ‘தமிழ் படத்தின்’ மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து பல காமெடி படங்களில் நடித்த அசத்தி வருகிறார். அதேபோல் இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “காசேதான் கடவுளடா”. இப்படம் 1972 ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக் ஆகும்.

வைரலாகும் மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா' படத்தின் டிரைலர் - உற்சாகத்துடன் கண்டு களித்து வரும் ரசிகர்கள்.

இதில் கதாநாயகனாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, சிவாங்கி, ஊர்வசி, நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்தோடு கண்டு களித்து வருகின்றனர்.

Kasethan Kadavulada - Official Trailer | Shiva | Priya Anand | Yogi Babu | R. Kannan | Raj Pratap