Swami Venkatachalapathy

Karungulam Lord Venkatachalapathy :

🕉 இறைவன் நாராயணன் ஆகிய திருமால் தமிழகத்தில் பல திருக்கோவில்களில் பல வடிவங்களில் காட்சி தந்து அருள்கிறார்.

சுதைவடிவமாக, அத்திமர வடிவமாக, லிங்க வடிவமாக என பல நிலைகளில் சேவை சாதிக்கிறார். அவ்வகையில் சந்தன மரத்தில் எழுந்தருளியுள்ளார் அருள்மிகு வெங்கடேசப்பெருமாள்.

🕉 வெங்கடேச பெருமாள்:

திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் கருங்குளம் மலையின் மீதுதான் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்துள்ளது.

🕉 இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் இரண்டு சந்தன கட்டைகள் உருவில் காட்சி அளிக்கிறார்.

அடேய் நீங்களுமாடா? லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை விளாசும் நெட்டிசன்கள் – இந்த வீடியோவை பாருங்க.!

உயரமான இரண்டு சந்தன மரக்கட்டைகள் உச்சியில் பெருமாளின் நாம வடிவம், கிரீடம், திருவடி ஆகியவை தங்கத்தால் அணிவிக்கப்பட்டு திருமலையில் குடிகொண்டுள்ள அருள்மிகு திருவேங்கடமுடையான் என்னும் வெங்கடேஸ்வர சுவாமி போலவே அலங்கரிக்கபடுகிறார்.

 

🕉 சிறப்பு:

இங்குள்ள உறங்காப் புளிய மரமும், ஊறாத கிணறும் மற்றுமொரு முக்கியமான சிறப்பாகும். இந்த புளிய மரத்தின் புளியம்பூ என்றுமே புளியங்காய் ஆக மாறுவது இல்லை.

அது மட்டுமல்லாமல் இங்குள்ள புளியமரம் என்றுமே உறங்காமல் இருக்கும். அதைப் போன்று இங்குள்ள கிணற்றில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருக்கும். குளகிரி  பெருமாளை எல்லோரும் சென்று தரிசிப்போம் வாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here