Karunas Request to Vetrimaaran | Dhanush | Ken | Asuran | Kollywood Cinema News | Tamil Cinma News | MLA Karunas | Dhanush Movies
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தின் கருணாஸின் மகன் கென்னும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படியான நிலையில் கருணாஸ் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துளார்.

Karunas Request to Vetrimaaran : 

இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் “ ஆண்ட பரம்பரை நாங்க தான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக் கிட்டேருந்து எங்களுக்கு எடம் வந்ததா! என்ற வசனம் வருமிடத்தில் எதிர் தரப்பினர் பேசும் உரையாடலில் “ எத்தனை நாளாடா சொல்லிக் கிட்டே இருப்பீங்க ஆண்ட பரம்பரைன்னு” என்று முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக உரையாடல் அமைந்திருக்கிறது.

இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட விஜய் – ஏன்? எதற்கு தெரியுமா?

இந்த வசனம் எங்களது முக்குலத்தோர் சமுதாயத்தினரை இழிவு படுத்துவது போல இருப்பதாகவும் இதனை நீக்குமாறும் வெற்றிமாறனிடம் கூறியிருந்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று இந்த வசனத்தை நீக்கியதற்கு நன்றி கூறியுள்ளார்.

திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இருக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் நமது முகத்தை காட்டும் கண்ணாடி மீது கல் எறிந்தால் கண்ணாடி உடைந்து பலரின் பாதங்களை கிழித்து விடும் எனவும் கருணாஸ் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.