சத்தம் இல்லாமல் மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் கருணாஸ்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கருணாஸ். காமெடி நடிகராக அறிமுகம் ஆகி அதன்பின்னர் பல்வேறு ஹீரோ பார்க்கவும் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்தார். அதன் பிறகு தனியாக அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மனைவி கிரேஸ் கருணாஸ் பாடகியாக திரையுலகில் வலம் வருகிறார். மேலும் இவர்களின் இளைய மகன் கென் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

இப்படி கருணாஸ் குடும்பத்திலிருந்து மூவரும் திரை உலகைச் சார்ந்தவர்களாக இருந்து வந்தாலும் இவர்களின் மகள் டயானா மட்டும் சினிமா பக்கம் வராமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் டாக்டருக்கு படித்துள்ள டயானாவுக்கு கருணாஸ் சத்தம் இல்லாமல் திருமணம் செய்து வைத்துள்ளார்.

கென் கருணாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டு திருமண வாழ்த்துக்கள் அக்கா, மாமா என பதிவு செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CoSGdaWPf4Y/?igshid=YmMyMTA2M2Y=