Karunai Kilangu Pajji

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு – 1/2 கிலோ, வெங்காயம் – 1,
சோள மாவு – 1/2 கப்,
அரிசி மாவு – 1/2 கப்,
கடலை மாவு – 1/2 கப், ஏதாவது ஒரு கீரை – ஒரு பிடி,
பச்சைமிளகாய் – 2,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை:

1) உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், கீரை, பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2) ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் கீரையைப் போட்டு வதக்கவும்.
3) மசித்த கருணைக்கிழங்குடன் வதக்கியவற்றை போட்டு கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
4) மேல் மாவுக்கு சோள மாவு, கடலை மாவு, அரிசி மாவு மூன்றையும் பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
5) கருணைக்கிழங்கு உருண்டைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
6) சுவையான கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here