Karthi’s Kaidhi shot in 62 night days
Karthi’s Kaidhi shot in 62 night days

Karthi’s Kaidhi shot in 62 night days – 62 இரவுகளில் கைதி படத்தை முடித்திருக்கிறார்கள். காரணம் இப்படம் முழுக்க முழுக்க இரவில் அதுவும் இருட்டில்தான் நடக்குமாம். எனினும் இதில் ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெறுமாம்.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி , தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.

இப்போ நீங்க எமி மட்டுமில்ல மம்மியும் கூட.. எமியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதைதொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது.

இப்படம் குறுகிய கால படமாக உருவாகியுள்ளது. படம் முழுக்க சிறைக்குள் நடக்கும் கதை என்பதால் சீக்கிரம் முடித்துவிட்டார்களாம். மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியே கிடையாதாம்.

அதேபோல் 62 இரவுகளில் இப்படத்தை முடித்திருக்கிறார்கள். காரணம் இப்படம் முழுக்க முழுக்க இரவில் அதுவும் இருட்டில்தான் நடக்குமாம். எனினும் இதில் ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெறுமாம்.

படப்பிடிப்பு முடிந்ததால் படம் ஜூலையில் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.