Karthikeya About Valimai Movie

அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதற்கு விஜய் படம் தான் காரணம் என நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

Karthikeya About Valimai Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க என்ன காரணம் என்பது பற்றி பேசியுள்ளார். அதாவது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருப்பார் அதேபோல் நான் ஈ திரைப்படத்தில் சுதீப் வில்லனாக நடித்து இருப்பார். இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவுக்கு நிகரான வேடங்களில் வில்லன்கள் நடித்திருப்பார்கள். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தான் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.