Karthikeya About Valimai Movie Update

வலிமை படத்தின் அப்டேட் எப்போது வரும் என ஏர்போர்ட்டில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகர் கார்த்திகேயா.

Karthikeya About Valimai Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்தவித அப்டேட்டில் படக்குழு வழங்காமல் இருந்து வருகிறது.

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அத்தனை நடிகர்களிடமும் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர். முதல்வரின் பிரச்சார கூட்டத்தில் கூட அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது வரும் என கேட்டு அலப்பறை செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் கார்த்திகேயாவை ஏர்போர்ட்டில் பார்த்த ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதற்கு கார்த்திகேயா‌ Very Soon என பதிலளித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/ThalaAjith_Page/status/1347027579992043521?s=19
https://twitter.com/Being_Ra6cal_/status/1347040852728713218?s=19