இந்தியாவையே அதிர வைக்கும் திரைப்படமாக வலிமை இருக்கும் என வில்லன் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

Karthikeya About Valimai Movie : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தினை வினோத் இயக்கியுள்ளார்.

தசைகள் பலம் பெற, நல்லதோர் ஆசனம்..

படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். தற்போது இவர் இந்தப்படம் பற்றிய சில தகவல்களை வெளியிட்டுள்ளார். வினோத் படத்தின் ஸ்கிரிப்ட்டை என்னிடம் கொடுத்த போது முழுமையாக படித்துப் பார்த்ததும் எனக்கான கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். படத்தில் வில்லன் ஹீரோ என இருவரும் உடலளவிலும் மனதளவிலும் வலிமையானவர்களாக இருப்பார்கள். என்னுடைய பெயரும் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும்.

அஜித் சார் அனைவருடனும் அன்பாகவும் அனைவருக்கும் உதவி செய்பவராகவும் செயல்பட்டார். சொல்லப்போனால் அவர்தான் எனக்கு துப்பாக்கியை எப்படி பிடிப்பது தோட்டாவை எப்படி மாற்றுவது என சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்தது எனக்கு படம் முழுவதும் உதவியது.

Annaatthe கலவையான விமர்சனம்..குவியும் Box-Office வசூல் – இத்தனை கோடியா? 

வலிமை திரைப்படம் இந்தியாவில் நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கான ஆக்ஷன் திரைப்படமாக வலிமை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.