Karthik Subbaraj
Karthik Subbaraj

Karthik Subbaraj : பேட்ட திரைப்படம் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஆண்டு பொங்கலன்று வெளியானது.

பொங்கல் விருந்தாக வெளியான ரஜினியின் பேட்ட படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. ரஜினியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறுவது இதுவொன்றும் புதிதல்ல.

ஷங்கரை அழைத்து கதைக்கேட்ட விஜய் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

ஆனால் பேட்ட படத்தின் வெற்றி அவர் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வெற்றியாக அமைந்துள்ளது.

”எங்கள் ஆதர்ச நாயகன் மீண்டு வந்துவிட்டார்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் திரையரங்குகளிலும் கொண்டாடி தீர்த்தனர்.

இதோ! தர்பாரில் ரஜினி, நயன்தாராவின் லுக் இதுதான் – வைரலாகும் புதிய புகைப்படங்கள்

இப்படி தனக்கு ஸ்பெஷல் படம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய மருமகன் விஷாகனுக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என ரஜினி விருப்பம் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இதை விஷாகன் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இப்போதைக்கு தான் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.