karthik subbaraj
karthik subbaraj

karthik subbaraj : பேட்ட திரைப்படம் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஆண்டு பொங்கலன்று வெளியானது.

பொங்கல் விருந்தாக வெளியான ரஜினியின் பேட்ட படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. ரஜினியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறுவது இதுவொன்றும் புதிதல்ல.

கபாலி பாணியில் முருகதாஸ் படத்தில் நடிக்கும் ரஜினி – விவரம் உள்ளே!

ஆனால் பேட்ட படத்தின் வெற்றி அவர் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வெற்றியாக அமைந்துள்ளது.

”எங்கள் ஆதர்ச நாயகன் மீண்டு வந்துவிட்டார்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் திரையரங்குகளிலும் கொண்டாடி தீர்த்தனர்.

கூடவே இப்படத்தின் முதல் காட்சியில் ரஜினி பேசும் ”வீழ்வேனென்று நினைத்தாயோ” எனும் வசனம் அவர் தன் எதிரிகளுக்கு சொன்னது போலவே இருந்தது.

இப்படி பல சிறப்புகளை கொண்ட படம் என்பதால் மறுபடியும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ரஜினி ஓகே சொல்லிவிட்டாராம்.

இதில் என்ன ஆச்சரியமென்றால் இப்படத்தில் தனுஷும் ஒரு ரோலில் நடிக்கிறாராம்.

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் படம் முடிந்ததும் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.