Karthik Subbaraj About Petta 2
Karthik Subbaraj About Petta 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

Karthik Subbaraj About Petta 2 : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இயக்குனராக மட்டுமல்லாமல் கார்த்திக் சுப்பராஜ் புரோடக்சன் மற்றும் ஸ்டோன் பென்ச் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் நடத்தி வருகிறார்.

தற்போது இவரது தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் என்பவரின் இயக்கத்தில் பெண் குயின் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் நாளை (ஜூன் 19) அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக கார்த்திக் சுப்பராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசியுள்ளார். வேட்ட படத்தை இயக்கும் போது அதன் இரண்டாம் பாகம் பற்றி எந்தவித யோசனையும் இல்லை.

பிக்பாஸ் வனிதாவுக்கு சைலண்டாக நடக்கும் மூன்றாவது திருமணம்? இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை

படம் ரிலீஸான பிறகு ரசிகர்கள் பேட்டை 2 படம் பற்றி கேட்டு வந்தனர். சில ரசிகர்கள் அது பற்றிய கதைகளையும் அனுப்பி வந்தனர்.

ஆனால் தற்போதைக்கு அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனை இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் நடக்கலாம் என கூறியுள்ளார்.

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் நடிகர் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் கொரோனா வைரஸ் பரமன் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

மேலும் விக்ரமையும் அவரது மகன் துருவ்வையும் வைத்து சியான் 60 என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.