Karthik Subbaraj About Chiyaan 60
Karthik Subbaraj About Chiyaan 60

சியான் 60 திரைப்படம் திட்டமிட்டு இணைந்த கூட்டணி அல்ல என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Karthik Subbaraj About Chiyaan 60 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விக்ரம் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சியான் 60 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவும் இப்படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இப்படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சியான் 60 திரைப்படம் திட்டமிட்டு நடந்தது அல்ல.

இவர்தான் ’தல’ – கார்த்திக் சுப்புராஜின் டிவீட்டால் கடுப்பான அஜித் ரசிகர்கள்; கலங்கிபோன கார்த்திக்!

ஒருநாள் எதேச்சையாக விக்ரம் சார் புராஜக்ட் ஏதாவது இருந்தா சொல்லு என கேட்டார். அதன்பிறகு அவரை சந்தித்து நிறைய கதைகளை விவாதித்தோம்‌.

இறுதியில் இந்த படத்தை உறுதி செய்தார். இன்னும் இந்த படத்தின் கதையை முழுமையாக கூட எழுதி முடிக்கவில்லை என கூறியுள்ளார்.