Karthik Dial Seytha Yenn Profit
Karthik Dial Seytha Yenn Profit

கார்த்திக் டயல் செய்த எண் என்ற சிம்புவின் 12 நிமிட குறும்படத்தால் கௌதம் மேனனுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Karthik Dial Seytha Yenn Profit : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் மனதிலும் ஜெஸ்ஸியாக ஆழமாக இடம்பிடித்தார் திரிஷா.

சிம்பு ரசிகர்களே வெறித்தனமான ஆட்டத்துக்கு தயாராகுங்க.. – வெளியான செம அப்டேட்!

இந்த வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் கௌதம் மேனன் மற்றும் சிம்பு, திரிஷாவை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதை களத்தை மையமாகக்கொண்டு இக்குறும்படம் உருவாக்கியிருந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அது சமயம் திரிஷா சிம்புவை தனக்கு மூன்றாவது குழந்தை எனக் கறியது கேலி கிண்டலுக்கும் உள்ளானது. இருப்பினும் இந்த குறும்படத்தில் கவுதம் மேனனுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

இக்குறும்படத்தால் அவர் கிட்டத்தட்ட 20 லட்சம் வரை பெற்றிருப்பதாக பிரபல பத்திரிக ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குறும்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் ஒரு சான்ஸ் கொடு என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

நீருக்கு மேலே படுக்கை, படுக்கைக்கு மேல கவர்ச்சி பிகினியில் போஸ் – கல்யாணத்துக்குப் பிறகும் அடங்காத சாயிஷாவின் கவர்ச்சி (புகைப்படம் உள்ளே)

இந்த ஆல்பம் பாடலில் சாந்தனு, கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மாலையில் திட்டமிட்டு மறுநாள் காலையில் சூட்டிங்கை தொடங்கி இந்த ஆல்பம் பாடலை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.