முதல் தவணை கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.

Karthi Takes Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பற்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது.

நான் போட்டுவிட்டேன் நீங்களும் போட்டுக்கோங்க.. கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நடிகர் கார்த்தி.!!

கொரோனா வைரஸ் இன் இரண்டாவது அலையால் இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மீண்டும் மூன்றாவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது.

இதனால் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் கொரோனா தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் தவணை கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.