கார்த்தி

நடிகர் கார்த்தி தான் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என நிரூபித்துள்ளார். கார்த்தியின் செயலால் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் கடைக்குட்டி சிங்கம்.

சாயிஷா, சத்யராஜ், பிரியா பவானி ஷங்கர், பானு ப்ரியா, விஜி சந்திர சேகர், சூரி என பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்க டி.இம்மான் இசையமைத்திருந்தார்.

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் விவசாயிகளை பற்றிய படமாக இருந்ததால் குடும்பம் குடும்பமாக படத்தை பார்க்க மக்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நமது நெல்லை காப்போம் நெல் இரா.ஜெயராமன் கடும் புற்றுநோய் தாக்குதலால் உயிர் காக்க போராடி வருகிறார். இவரை சமீபத்தில் நடிகர் கார்த்தி தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர் நல்ல நடிகருக்கு ரசிகனாக இருக்கிறேன் என்பதை விட நல்ல மனிதருக்கு ரசிகனாக இருக்கிறேன் என்பதை எண்ணி பெருமை கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

கார்த்தியின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.